திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் ஒரு தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஒட்டலுக்கு வெளியே வாலிபர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு பத்துக்கு மேற்பட்ட வாலிபர்கள்
பேசிக் கொண்டு இருந்தனர். போலீசார் அங்கு வருவதை கண்ட வாலிபர்கள் கும்பலில் ஐந்து பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஐந்து வாலிபர்களை போலீசார் பிடித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த வாலிபர்கள் பயன்படுத்திய மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை போலீசார் சோதனை செய்தபோது ஏராளமான அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் ஊசிகள் இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட வாலிபர்களிடம் கலெக்டர் அலுவலகம் அருகே கூடியது ஏன்? காரில் ஏராளமான பட்டாக்கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது ஏன் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.