திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் மக்கள் தவித்து வந்த நிலையில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணிக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென கருமேகங்கள் கூடி நல்ல மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் பெய்தது. மழை காரணமாக மாநகர பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மழையால் சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.