முசிறியில் பெரியார் பாலம் அருகே பேக்கரி ஷாப்பில் ஹான்ஸ் விற்க வைத்திருந்தவர் கைது
திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தனது குழுவினருடன் பெரியார் பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குஞ்சா நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வயது 40 என்பவர் பெரியார் பாலம் பகுதியில் உள்ள தனது பேக்கரி ஷாப்பில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். இதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் ரூ100 மதிப்புள்ள ஐந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.