முசிறி ஐஜேகே அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

4691பார்த்தது
முசிறியில் ஐஜேகே பாரிவேந்தர் கட்சி அலுவலகம் அருகே உள்ள சரஸ்வதி ரெசிடென்சி என்ற விடுதியில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை. வருமானவரித்துறை அலுவலர்களிடம் ஐஜேகே கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் சார்பில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவரது கட்சி தேர்தல் அலுவலகம் முசிறியில் அமைந்துள்ளது. அலுவலகத்தின் அருகே உள்ள சரஸ்வதி ரெசிடென்சி என்ற தனியார் விடுதியில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக பாரிவேந்தர் கட்சி அலுவலகத்தில் சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாக கட்சி அலுவலகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் இருப்பதாக தேர்தல் அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். சோதனையில் காரில் இருந்து பணம், பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. விடுதியில் நடைபெற்ற சோதனையிலும் பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கைப்பற்றபடவில்லை.

தொடர்புடைய செய்தி