திருச்சி மாவட்டம் ணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கம். இந்நிலையில் இவர் தோட்டத்தில் 10அடி நீளமுடைய இரண்டு மலை பாம்பு இருந்துள்ளது. இது தொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த இரண்டு மலைப்பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவற்றை வனத்துறையினர் அந்த மலைப்பாம்புகளை துவரங்குறிச்சி அருகே உள்ள மலைப்பகுதிகளில் பாதுகாப்பாக விட்டனர்.