திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணப்பாறை திருச்சி சாலையில் உள்ள சந்தை பகுதியில் காஜா மொய்தீன் மற்றும் முஸ்தபா ஆகிய இருவரும் பணம் வைத்து சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.