மணப்பாறை அரசு கலைக் கல்லூரி திறப்பு விழா

70பார்த்தது
மணப்பாறை அரசு கலைக் கல்லூரி திறப்பு விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிகமாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கி செயல்பட்டு வந்ததுடன் பின்னர் மணப்பாறை அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகின்றது. இதுஒருபுறம் இருந்தாலும் பண்ணப்பட்டி அருகே கரம்பகாடு பகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 14. 94 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதற்கான விழா இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கல்லூரியை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், கரூர் எம். பி. ஜோதிமணி, மணப்பாறை எம். எல். ஏ அப்துல் சமது, மணப்பாறை ஒன்றிய குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, கல்லூரி முதல்வர் மலர்மதி ஆகியோர் குத்து விளக்கேற்றினர். அதனை தொடர்ந்து கல்லூரியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி, சட்டமன்ற உறுப்பினர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றினர். இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள்‌, உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி