26ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவிகள்

1101பார்த்தது
26ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவிகள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலையப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1997 ம் ஆண்டு படித்த மாணவிகள் படிப்பு முடித்த பின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு பல்வேறு பணிகளிலும், இல்லத்தரசிகளாகவும் உள்ளனர். இந்நிலையில் அனைவரும் மீண்டும் பள்ளியில் ஒன்றிணைய முடிவு செய்து இந்த ஆண்டின் இறுதி நாளான நேற்று இணைத்து தங்களின் நினைவுகளை பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து அதை அனைவரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி 40 முன்னாள் மாணவிகள் இன்று சீருடை போல் அனைவரும் ஒரே நிறத்தில் சேலை அணிந்து பள்ளிக்கு வந்தனர். பின்னர் பள்ளியில் சில விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து பள்ளியின் தங்கள் பயின்ற வகுப்பறைகளை பார்த்து மகிழ்ந்து மலரும் நினைவுகளை பரிமாறி கொண்டனர். அதனை தொடர்ந்து கும்மியடித்து ஆடிப்பாடி ஆனந்தம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கு நிதி கொடுத்தார்கள். பின்னர் மதியம் அனைவரும் உணவு உண்டு நிகழ்கால அனுபவங்களை பரிமாரி கொண்டனர். இவ்வாறு 26 ஆண்டுகளுக்கு பின் பள்ளி முன்னாள் மாணவிகள் ஒன்றிணைந்து தங்களின் மலரும் நிகழ்வுகளை பரிமாரி கொண்ட நிகழ்வு மணப்பாறை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி