"மீன்பிடித் தடைக் காலத்தில் ரூ.8,000 வழங்கப்படும்" - அமைச்சர் அறிவிப்பு

62பார்த்தது
"மீன்பிடித் தடைக் காலத்தில் ரூ.8,000 வழங்கப்படும்" - அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும். 3 ஆண்டு பழமையான விசைத்தறிகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும். கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மீனவ பகுதிகளில் மீன்பிடி இறங்குதளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்” என அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலம் ஆகும்.

தொடர்புடைய செய்தி