துறையூா் ஒன்றியத்தில் நடுவலூா் ஊராட்சியில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்படும் பொது நூலகக் கட்டட மேற்கூரை, ரூ. 9.32 லட்சத்தில் கட்டப்படும் நியாய விலைக் கடை, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் ரூ. 3.50 லட்சத்தில் கட்டப்படும் வீடு, பொன்னுசங்கம்பட்டி ஊராட்சியில் ரூ. 29.97 லட்சத்தில் கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ. 30 லட்சத்தில் கட்டப்படும் புதிய ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
பின்னா் சிங்களாந்தபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம், இ-சேவை மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள், ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் இருப்பு தரம், அளவு ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா். இதையடுத்து துறையூா் கிளை நூலகத்தை பாா்வையிட்ட ஆட்சியா் அங்கு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்களிடம் விசாரித்தாா்