வணிக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு

79பார்த்தது
வணிக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகேஸ்வரன் சம்பவம் நடந்த நேற்று இவர் திருச்சி குண்டூர் மதுரை வீரன் நகரில் உள்ள சுமதி வணிக வளாகம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு சொந்த வேலை காரணமாக சென்றிருந்தார் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. வாகனத்தின் மதிப்பு ரூபாய் நாற்பதாயிரம் இருக்கும் என கூறப்படுகிறது இது குறித்து ரிஷிகேஸ்வரன் நவல்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரது இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி