டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

78பார்த்தது
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திருச்சி சோழன் நகர் சம்பங்கி தெருவை சேர்ந்தவர் கார்த்தி வயது 46. இவர் நேற்று தனது டூவீலரில் திருச்சி திண்டுக்கல் சாலையில் இனாம்குளத்தூர் அருகே உள்ள அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் கார்த்தி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார்.

தொடர்புடைய செய்தி