ஜி கார்னர் மைதானத்தில் விஜயின் முதல் மாநாடு...?

77பார்த்தது
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிறுகனூர் பகுதியில் மூன்று மைதானங்கள், இனாம் குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆனால் இந்த மைதானங்களில் அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்த ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மைதானத்தில் பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் மாநாடு நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி