சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த எம். எல். ஏ

58பார்த்தது
சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த எம். எல். ஏ
திருச்சி மாவட்டம் குள்ளம்பாடி அருகே உள்ள கல்லகம் ஊராட்சியில்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முதலமைச்சரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமினை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் , துணை தலைவர் , வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர், மாணிக்கவாசகம் , ஆவுத்தி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி