சமையலுக்கு சாம்பார் செய்யும்போது முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும். சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பாரின் ருசி கூடும். வெந்தயக் குழம்பு செய்யும்போது வெந்தயத்தைத் தாளிக்காமல், வெறும் வாணலியில் நன்றாக வறுத்துப் பொடி செய்து தூவினால், குழம்பு மணமாக இருக்கும்.