வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று (செப். 25) தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிக வெப்பம் இருக்கும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.