யூடியூப் சேனலை உருவாக்க மூன்று நாள் பயிற்சி

36566பார்த்தது
யூடியூப் சேனலை உருவாக்க மூன்று நாள் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 29.01.2024 முதல் 31.01.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தருதி 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032, 044 22252081/22252082, 8608102000/6668100181/7010143022. முன்பதிவு அவசியம்.

அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி