கே. துரைசாமிபுரத்தில் உள்ள மணிகட்டி மாடசாமி கோயில் கொடை விழாவிற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், கே. துரைசாமிபுரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மணிகட்டி மாடசாமி திருக்கோயில் கொடைவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
வருகின்ற 11. 10. 2024 அன்று வெள்ளிக்கிழமை மற்றும் 12. 10. 2024 சனிக்கிழமை மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. 10. 10. 2024 அன்றே பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்த வேண்டும். வாகன நிறுத்தங்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்திலிருந்து செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.