சுடுமண் கலனா? ஆய்வு நடத்த வலியுறுத்தல்

68பார்த்தது
சுடுமண் கலனா? ஆய்வு நடத்த வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் பட்டிணமருதூரில் சர்வே எண் 184/1 கண்மாயில் வடபுறம் கரையில் உள்ள சிறிய அத்தி மரம் அருகில் காணப்படும் சுமார் 4 அடி வெளி விட்டமும், 2 அங்குலம் விளிம்பு கனமும் கொண்டதாக தென்படுகிறது. இது சுடுமண் கலனா? அல்லது வட்ட வடிவ உறை கிணறா? என்பதை கண்டறிய உடனடியாக ஆய்வு தேவை.

இந்த கண்மாயானது 1950க்கு பின்புதான் தோண்டப்பட்டது என்பதும், இதன் மேல்புறம் பகுதியில் காணப்படும் மணல் கல் கட்டுமானங்கள் தொன்மையான சாலையினை போன்றுள்ளது என்றும் இதே நேர்கோட்டில் வடக்கே உள்ள சர்வே எண் 38 பகுதியிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெடி வைத்து தகர்க்கப்பட்ட சாலை போன்ற மணல் கல் சிதைவுகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியினை அலட்சியம் செய்யாமல் தொல்லியல் துறையின் அதிகாரிகள் உடனே செயல்பட்டு இந்த தொன்மையான தமிழர்களின் நகர நாகரிக உண்மையினை வெளிகொணர்ந்திட வேண்டும் என மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி