பள்ளி செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு: அலுவலகம் முற்றுகை!

76பார்த்தது
கீழவேலாயுதபுரம் பகுதியில் பள்ளி செல்லும் பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணிவகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், "ஓட்டப்பிடாரம் தாலுகா, புதூர்பாண்டியாபுரம், மேலஅரசடி, கீழவேலாயுதபுரம் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிடையாது.

அருகில் மேலவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருறார்கள். எங்கள் கிராமத்தில் இருந்து அந்த கிராமத்திற்கு செல்லும் பாதை அரசு பதிவேட்டில் இருக்கும் கிராம வரைபடத்தில் உள்ளது. இந்தப் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து பாதையை தற்போது அடைக்கப்பட்டுள்ளது.

ஆகவே எங்கள் கிராமத்தில் இருக்கும் பள்ளி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாமல் கடந்த 11. 06. 2024 அன்றிலிருந்து இன்று வரை குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக இந்த பாதையை மீட்டு, மாணவர்களுக்கு தடையில்லா கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி