தூத்துக்குடி: கணக்காளர் தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு

53பார்த்தது
தூத்துக்குடி: கணக்காளர் தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு
பட்டய கணக்காளர்-இடைநிலை, நிறுவன செயலாளர்-இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant-Intermediate), நிறுவன செயலாளர்-இடைநிலை (Company Secretary-Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost and Management Accountant-Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும் இப்பயிற்சி பெற விரும்பும் மாணக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3. 00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www. tahdco. com பதிவுசெய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி