திமுகவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கிய அதிமுகவினர்.

50பார்த்தது
எட்டயபுரத்தில் திமுகவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கிய நகர செயலாளர் ராஜகுமார்!


தமிழக முழுவதும் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினாரால் திமுக அரசிற்கு எதிராக பொது மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த ஆட்சியின் அவல நிலை குறித்து கட்சியினர் விளக்கி வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டையபுரத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு அறிவுறுத்தலின் பேரில், எட்டையபுரம்அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் கள்ளச்சாராயம் மரணங்கள், போதைப் பொருட்கள் கடத்தல், ஜாபர் சாதி கைது மற்றும் கள்ளச்சாராயம் மரணங்களுக்கு நீதி கேட்டும். #RESIGN_STALIN போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை எட்டயபுரத்தில் உள்ள டீ கடை, பூக்கடை, ஹோட்டல், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு திமுக ஆட்சியின் படுமோசமான நிலை குறித்து விளக்கி கூறினார். இதில் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி