வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அஃப்ரிடியின் தோளில் கை வைத்து பேசுகிறார். அப்போது ஷாகின், கேப்டனின் கையை தோளில் இருந்து தட்டிவிடுகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.