PhonePe பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பொருட்கள் வாங்கிய இடத்தில் உடனடியாக பணம் செலுத்தும் புதிய வசதியை போன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் வங்கிகளிடமிருந்து கிரெடிட் லைன் வசதியைப் பெற்றிருந்தால், அந்த கிரெடிட் லைனை போன்பே உடன் இணைக்கலாம். இதனால், PhonePe விலிருந்து கிடைக்கும் கடன் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம். மேலும், குறுகிய கால கடன் வசதியும் பெறலாம்.