தூத்துக்குடி: கோவில்பட்டியில் ரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெத்தையா மகன் முத்து காமாட்சி (40). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலையில் தங்கள் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன், ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான தொழிலாளி முத்து காமாட்சிக்கு முருகேஸ்வரி என்று மனைவியும், காயத்ரி என்ற மகளும், பிரேம்குமார் என்று மகனும் உள்ளனர்.