வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:

67பார்த்தது
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டு கட்ட பயிற்சி முகாம்கள் நிறைவு பெற்று இன்று மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது


தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் வைத்து இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பணிபுரியக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாவது கட்ட பயிற்சி முகாம் இன்று நடைபெற்று வருகிறது இதில் சுமார் 1440 ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்

இந்த பயிற்சி முகாமில் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு சீட்டு வரும் விவி பேட் மிஷின் உள்ளிட்டவற்றை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது வாக்குப்பதிவு முடிந்த பின்பு எவ்வாறு அதை சீலிட்டு அனுப்புவது என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது


இந்த பயிற்சி முகாம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி