தூத்துக்குடி: டைடல் நியோ பார்க்; அமைச்சர்கள் ஆய்வு

68பார்த்தது
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் 30 கோடி மதிப்பில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள "டைடல் நியோ" பார்க்கை தொழில், முதலீடு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கட்டிடம் வரைபடம் போல் அமைக்காமல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் கட்டிடத்தில் பெயிண்டிங், ஜன்னல் உள்ளிட்டவைகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். மேலும் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பவத் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, ஏஎஸ்பி மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி