இன்சூரன்ஸ் முகத்திரை கிழிக்கப்படும்;விக்கிரமராஜா எச்சரிக்கை

1099பார்த்தது
தூத்துக்குடியில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார அப்போது அவர் பேசும்போது
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பினால் பல்வேறு வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கடந்த 5-நாட்களாக பாதிப்பு அடைந்த பகுதிகளில் ஆய்வு செய்து கணக்கெடுக்கப்பட்டு சுமார் 2-ஆயிரம் வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு உதவிகளை செய்துள்ளோம்.

உதவிகள் செய்த தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக பேரமைப்பு நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு 5-லட்சம் கடன் உதவி வழங்க வேண்டும் அப்போதுதான் வணிகர்கள் மீண்டெழ முடியும்.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போடும்போது ஒரு பேச்சும் இழப்பீடு என்று செல்லும்போது ஒரு பேச்சும் பேசுவதாக தகவல் வருகின்றது இந்த போக்கை தொடருமானல் அவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு பொதுமக்கள் வணிகர்கள் மத்தியில் இன்சூரன்ஸ் நிறுவனம் தொழில் செய்ய முடியாத நிலையை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கும். என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி