அதிமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்ட எடப்பாடியார்

4212பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டிவிடி சிக்னல் அருகே எம் ஜி ஆர் திடலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து அவர் பேசும் போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் குலசேகர ப்பட்டினம் ராக்கெட் ஏவுதலத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அதிமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து உங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்தில் சிவசாமி வேலுமணிக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி