திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிப்பு

77பார்த்தது
திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிப்பு
நாளுக்கு நாள் வருமானம் அதிகரித்து வந்தாலும் திருச்செந்தூர் ரயில் நிலையம் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பயணிகள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கடந்த சில வருடங்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், முக்கிய திருவிழா காலங்களிலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் வந்து செல்லும் அளவுக்கு திருச்செந்தூரிலிருந்து கூடுதல் ரயில்களும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ரயில்களை நம்பி வரும் பயணிகள் பலர் போதிய ரயில் இல்லாததால் ஏமாற்றடைகின்றனர்.

கோயிலுக்கு வருவதற்கும், திரும்பி செல்வதற்கும் தாமதமாகிறது. இதுமட்டுமின்றி திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். விஷேச நாட்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரயில்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி