கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!

85பார்த்தது
கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தலைமையில் இன்று (செப்.,10) நடைப்பெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 386 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் 2023 - 2024ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்டு, மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளான குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைப்பெற்றது.

இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா முதல் பரிசுத்தொகை ரூ. 6000, இரண்டாம் பரிசுத்தொகை ரூ. 4500, மூன்றாம் பரிசுத்தொகை ரூ. 3500 என மொத்தம் வெற்றி பெற்ற 15 மாணவர்களுக்கு ரூ. 70, 000க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி