குளியலறையில் சடலமாக கிடந்த சிறுமி.. சென்னையில் அதிர்ச்சி

65பார்த்தது
குளியலறையில் சடலமாக கிடந்த சிறுமி.. சென்னையில் அதிர்ச்சி
தஞ்சையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, சில ஆண்டுகளாக சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளியலறைக்குச் சென்ற சிறுமி, நீண்ட நேரமாக கதவை திறக்காததால் வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து பார்த்தபோது சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால், வீட்டின் உரிமையாளர், அவரது மனைவியிடம் விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி