ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு: எஸ்பி பாராட்டு!

65பார்த்தது
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு: எஸ்பி பாராட்டு!
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (26. 07. 2024) கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 05. 08. 2024 அன்று வரை 11 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று கொடியேற்ற விழாவை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது பனிமய மாதா பேராலய புறக் காவல் நிலைய ஒலிப்பெருக்கி மூலம் பக்தர்களுக்கு தங்கள் குழந்தைகளை கையில் பிடித்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். பணம், நகை மற்றும் உடைமைகளை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தூத்துக்குடி ஊர்க் காவல் படை வீரர் திரு. அதிசயமணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. எடிசன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ. கா. ப உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி