தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா். எம். புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் உலக சதுப்பு நில காடுகள் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து காடுகள், மரங்களின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் உதவித் தலைமையாசிரியா்கள் சாம் ஜெயக்குமாா், வளா்மதி ராஜபாய், தெல்மா, தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன் டேனியல் ஆகியோா் கலந்து கொண்டனா்.