நீட் தேர்வு வருங்காலத்தில் ஆன்லைனில் நடக்கலாம் எனவும், அது தொடர்பான இறுதி முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். "நீட் தேர்வை நடத்தும் நிர்வாக அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் தேர்வை வழக்கம்போல் காகிதம், பேனாவை பயன்படுத்தி நடத்தலாமா? அல்லது ஆன்லைன் முறையில் நடத்தலாமா என்று கல்வி அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது” என்றார்.