தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்று நதிக்கரையோரம் உள்ள ஆறாம் பண்ணை கிராமத்தில் ஆற்றுக் கரையோரம் பலப்படுத்தாத காரணத்தால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உடனடியாக கரையை பலப்படுத்த கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள கிராமம் ஆறாம் பண்ணை இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் இங்கு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றுக்கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டது
வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் கரை இன்னும் முறையாக பலப்படுத்தாத காரணத்தால் தற்போது வடகிழக்கு பருவமழை தூவங்கி உள்ளதால் திடீரென தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் கரை உடைந்து மீண்டும் வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உருவாகி உள்ளது
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஆறாம் பண்ணை கிராமத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்