பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இன மக்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் முக்கியமான திட்டங்களில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு மாற்றாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.
சலவைத் தொழிலில் ஈடுபட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப, தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு மாற்றாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.