நாசரேத்தில் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளைசார்பில் சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும், தேவையற்ற செலவுகளை குறைத்தல் மற்றும் சிக்கனத்தை உருவாக்கி சேமிப்பை அதிகரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகம் சார்பாக தூத் துக்குடி மாவட்டம் நாசரேத் ஜோதி மஹாலில் வைத்து சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும், தேவையற்ற செலவுகளை குறைத்தல் மற்றும் சிக்கனத்தை உருவாக்கி சேமிப்பை அதிகரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமி னை கிராம உதயம் நிறுவனரும், இயக்குனருமான டாக்டர் வி. சுந்த ரேசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து தேவையற்ற செலவுகளை குறைத்தல் மற்றும் சிக்கனத்தை உருவாக்கி சேமிப்பை அதிகரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சியை துவக்கி வைத்தார்.
மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தின் நிர்வாக கிளை மேலாளர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் இராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கிராம உதய பகுதி பொறுப்பாளர்கள் ஆறுமுக வடிவு, பிரேமா, முருகசெல்வி, அந் தோணியம்மாள், முத்துமாலை, பூலம்மாள், திலகவதி, உல்தா, புஷ்பா, பாப்பா, சுமித்ரா, கருத்துரை வழங்கினர். நிறைவாக ஆனந்த செல்வன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 350-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.