மின்கம்பங்களைச் திருடிய இரண்டு பேர் கைது!

77பார்த்தது
மின்கம்பங்களைச் திருடிய இரண்டு பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தின் வளாகத்தில் மின்விளக்குகள் அமைப்பதற்காக மின்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றாலை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த 2 மின்கம்பங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த தனியார் காற்றாலை நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஓட்டப்பிடாரம் மேலமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுடலைமாடன் மகன் ராபின்சிங் (24), ஓட்டப்பிடாரம் சங்கரராஜபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜன் (26) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி மின்கம்பங்களை திருடி அதனை கேஸ் வெல்டிங் மூலம் சிறு துண்டுகளாக வெட்டி சரக்கு வாகனத்தில் எடுத்து சென்று முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துக்குமார் (40) எண்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் ர் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரிகளான ராபின்சிங், ராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 1, 20, 000/- மதிப்புள்ள 2 மின்கம்பங்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி