தூத்துக்குடியில் அரசு பஸ் அதிரடியாக ஜப்தி!

5137பார்த்தது
தேனியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் தேனியில் இருந்து காரில் சாமி கும்பிட திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் அருகே கோவை அரசு பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து தேனியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து திருச்செந்தூர் அருகே சென்றபோது மகேஸ்வரன் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர். பலியானார் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் என் - 2- ல் மகேஸ்வரன் கோவை அரசு பணி மணைக்கு சொந்தமான பேருந்து மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த 2018-19ஆம் ஆண்டு மகேஸ்வரனுக்கு கோவை அரசு பணிமனை சுமார் 17 லட்சத்து 76 ஆயிரத்து 695 வழங்க உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டு ஐந்து வருடங்கள் ஆகியும் இழப்பீடு வழங்காததை தொடர்ந்து இன்று கோவை அரசு பணிமனைக்கு சொந்தமான திருச்செந்தூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி