நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது: ஆணைய உறுப்பினர்

69பார்த்தது
நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது: ஆணைய உறுப்பினர்
பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது என தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ. சங்கர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கல்லூரி மற்றும் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவம் ஆகியவற்றின் சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ. சங்கர் கூறியதாவது:

பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது. பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழியாக நிவாரணம் பெறலாம். நுகர்வோரின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன.

தொடர்புடைய செய்தி