மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை!

76பார்த்தது
மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை!
கோவில்பட்டி அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பூர்ணம்மாள் காலனியை சேர்ந்த செல்லையா மகன் பொன்னுச்சாமி. இவரது மனைவி ராஜாத்தி (42). இந்த தம்பதியின் ஒரே மகன் நிதிஷ் குமார் (19). இவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் அருகில் இருந்து ராஜாத்தி கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து ராஜாத்தி கதறி அழுதார். அவரது இறுதி சடங்கு முடிந்த நிலையில், யாருடனும் சரியாக பேசாமல் தனக்கு தானே புலம்பியவாறு மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ வீட்டிற்குச் சென்ற கிழக்கு போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி