கோவில்பட்டி மகாத்மா காந்தி இரத்ததான அறக்கட்டளை சார்பில் 27ம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம் வணிக வைசிய நடுநிலைப் பள்ளியில்நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் ரத்ததானம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி ரத்ததான அறக்கட்டளை நிறுவன தலைவர் தாஸ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் தாமோதர கண்ணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்ததான அறக்கட்டளை செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். இரத்ததான முகாமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ், அரசு மருத்துவர் சீனிவாசகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததானம் குறித்து பேசினார். இதில் ரோட்டரி சங்க பொருளாளர் கிருஷ்ணசாமி, இரத்ததான அறக்கட்டளை துணைத் தலைவர் சார்லஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை முருகசரஸ்வதி நன்றி கூறினார்