மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு!

75பார்த்தது
மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு!
துாத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பொன்குமரன் என்பவர் போட்டியிட்டார். இவர், தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய அரசியல் கட்சிகளின் விதிமீறல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் அவ்வப்போது புகார் மனு அளித்தார். இது சம்பந்தமான புகார்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பினார். அனைத்து வேட்பாளர்களும் சமம். ஆனால் துாத்துக்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களை தேர்தல் அதிகாரிகள் அவ்வாறு நடத்தவில்லை.  

வேட்பாளர் பொன்குமரன் ஆணையர் தேர்தல் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தார். ஆனால் புகாரின் மீது பதில் அளிக்காமல், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.


இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை (பொ) மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் மனு மீது டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர்கள் விசாரித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் பொன்குமரன் கூறுகையில், இதில் நீதி கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி