திண்டுக்கல் - Dindigul

கோபால்நாயக்கர் நினைவு நாள்: அனைத்து கட்சி நிர்வாகிகள் மரியாதை

இந்திய விடுதலைக்காக தீபகற்ப கூட்டமைப்பை உருவாக்கி தென்னிந்திய புரட்சிப் படை தென்னிந்திய புரட்சிப்படை தலைவராக இருந்த விடுதலை போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் 223ஆவது நினைவு நாள் செப்டம் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. திண்டுக்கல், கோபாலசமுத்திரக்கரையில் விருப்பாச்சி கோபால் நாயக்கர் தூக்கில் இடப்பட்ட இடத்தில் தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் அவரது திருவுருவ படத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் தலைமையிலான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, நாயுடு நாயக்கர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பாக முன்னால் அமைச்சர்கள் திண்டுக்கல் சி சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திண்டுக்கல்