‘மீண்டும் மோடி வந்தால் இது மாற்றப்படும்’ - யோகி ஆதித்யநாத்

53பார்த்தது
‘மீண்டும் மோடி வந்தால் இது மாற்றப்படும்’ - யோகி ஆதித்யநாத்
உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று நடந்த பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மோடி மீண்டும் பிரதமர் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் உள்ள அக்பர்பூர் நகரின் பெயர் மாற்றம் செய்யப்படும். காலனித்துவத்தின் அனைத்து தடையங்களும் இந்தியாவிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனால் இந்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டு நமது பாரம்பரியம் காக்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி