இந்த வார ஓடிடி ரிலீஸ் இதுதான்.. கெட் ரெடி

64பார்த்தது
இந்த வார ஓடிடி ரிலீஸ் இதுதான்.. கெட் ரெடி
ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில், 7 ஆஸ்கர் விருதுகளை பெற்ற 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் ஜியோ ஓடிடியில் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகிறது. இதே நாளில் ஹ்ரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியான 'ஃபைட்டர்' திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்த 'ஆப்ரகாம் ஓஸ்லர்' என்ற மலையாள திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தொகுப்பாளர் ரக்‌ஷன் நடிப்பில் வெளியான 'மறக்குமா நெஞ்சம்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.