நடைபெற்று முடிந்த நாகை நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் நேற்று மன்னார்குடி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் திருவாரூர் திமுக மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் அரிச்சந்திரபுரம், திருராமேஸ்வரம், கொத்தங்குடி , வடகோவனூர்,
உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார் அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆரத்தி எடுத்தும் பூரணகும்பமரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் துரை. அருள்ராஜன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாமாகண்ணன் , கார்த்திகா ராயல்ராதாகிருஷ்ணன், ரேவதிரமேஷ், செந்தில்குமார், கே. ஆர் சித்திரஞ்சன், நீலமணிபிரகாஷ் , சரவணன், இந்துமதிஜோதிபாசு, மெகபூப்மகதூம் மற்றும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.