அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்

63பார்த்தது
அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவக்கம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கட்டிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வருகை தந்த மாணவர்களுக்கு மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளியில் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் வகுப்பறைகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணி நடைபெற்று வருகிறது இந்த பணியினை பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராவுத்தர் அப்பா அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்பொழுது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அதற்காக காலை உணவு திட்டம் மதிய திட்டம் வரை.
தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நிர்வாகிகள் கூட்டமைப்பு சார்பில் தலைமை ஆசிரியர் தலைமையிலும் தற்பொழுது ஸ்மார்ட் வகுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ள விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி