கூத்தாநல்லூர் அருகே உள்ள கோம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த தம்பதி , கார்த்திகா. இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கார்த்திகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகாவிற்கு திங்கட்கிழமை நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் 108 அவசர உறுதியை வரவழைத்து அதில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திகாவை அழைத்துச் சென்றனர். மூலங்குடி பேரையூர் அருகே அதிகாலை 2. 50 மணியளவில் அவசர உறுதி செல்லும் போதே கார்த்திகாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அந்த ஊர்தியில் வந்த மருத்துவ நுட்புணர் முரளி கார்த்திகாவின் கணவர் சதீஷ் தாயார் மற்றும் வாகன ஓட்டுனர் வைரபாரதி ஆகியோரின் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். அப்போது கார்த்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இருவரும் சிகிச்சை பெற்று நலமாக உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்செவிலியர்கள் பொதுமக்கள் அவசர உறுதி மருத்துவ நுட்புணர் முரளி மற்றும் ஓட்டுநர் வைரபாரதியை பாராட்டினர். அவசர உறுதி மருத்துவ நிபுணர் முரளி ஏற்கனவே சென்னையில் எட்டு பிரசவமும் திருவாரூரில் நான்கு பிரசவமும் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.